பாண்டிய நாட்டு கொடில மீன் பார்த்திருப்பீங்க. ஆத்தோரம் நீந்தற மீனை பார்த்திருப்பீங்க... கண்ணாடி தொட்டிக்குள்ள பார்த்திருப்பீங்க... ஆனா, நமக்கு டாக்டரா அறிமுகமாகிற மீனை பார்த்திருக்கீங்களா..... பார்க்க பிரியப்பட்டால் வாங்க மருதகுளத்திற்கு
GARRA RUFA FISH
கால்களிலிருந்துதான் பல நோய்கள் உடலுக்குள் ஊடுருவுகின்றன. அதனால் முக்கியமா நாம் கவனிக்க வேண்டிய கால்களுக்குதான் இந்த மீன், வைத்தியம் பார்க்கிறது. அக்குபஞ்சர் முதல் நம்ம ஊர் கோவில்ல ஆணி மிதிக்கிறது வரை எல்லாமே பாதத்திலேயிருந்து தானே ஆரம்பிக்கிறாங்க.
இந்த சிகிச்சை மூலமாக நம் பாதத்தில் இருக்குற அழுக்கு எல்லாத்தையும் மீன்கள் எடுத்திடும். காலும் கூழாங்கல் மாதிரி பள பளவென்று ஆயிடும். சிகிச்சையின்போது மீன் காலை கடிக்கிறப்பவே மூளை வரை புத்துணர்ச்சி பரவும். மனசும் ஒருநிலைப்பட்டு, நம் வேலைகளிலும் முழுக் கவனம் செலுத்த முடியும் என்கிறார்கள்.
