திருநெல்வேலி அருகேயுள்ள மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரியில் வளாகத்தேர்வு அண்மையில் நடைபெற்றது.
இந்தத் தேர்வில் சென்னை மையங் ஷின் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர்கள் ஸ்டான்லி, ஆல்வின், எல்காம்போ எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலர்கள் ஜாவித் அகமது, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் இரு நாள்கள் வளாகத் தேர்வை நடத்தினர்.
இதில், கல்லூரியின் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் துறைகளின் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். நேர்முகத் தேர்வின் முடிவில் 20 மாணவர்-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஷாநவாஸ் ஆலோசனையின் பேரில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் முகம்மதுரபீக், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் தங்கபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.