Monday, September 14, 2015

மூன்றடைப்பு அருகே மருதகுளத்தில் போதையில் முதியவரை தாக்கிய வாலிபர் கைது

நாங்குநேரி, : மூன்றடைப்பு அருகே மது போதையில் முதியவரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மூன்றடைப்பு அருகேயுள்ள மருதகுளத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (66). கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் அங்குள்ள டீக்கடை ஒன்றில் இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சாம்பால்துரை மகன் மாணிக்கம் (31) மது போதையில் அவ்வழியாக வந்த ஒரு சிறுவனிடம் தகராறு செய்தார். அதனை சுடலைமுத்து தட்டிக் கேட்டார். அப்போது நடந்த தகராறில் மாணிக்கம் தாக்கியதில் காயம் அடைந்த சுடலைமுத்து நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜய சண்முகநாதன் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தைக் கைது செய்தார்.


Source http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=489950&cat=504

No comments:

Post a Comment