Wednesday, September 17, 2014

நெல்லை மருதகுளம் ரோசலிண்ட் செல்லையா அரசினர் மேல்நிலைப்பள்ளியின் 50 வது ஆண்டு விழா நடைபெற்றது.


நெல்லையை அருகே மருதகுளம் ரோசலிண்ட் செல்லையா அரசினர் மேல்நிலைப்பள்ளியின் 50 வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் வைகுண்டராமன் முன்னிலை வகித்தார்.
நரம்பியல் நிபுணர் டாக்டர்.சுப்பையா, கோவை டாக்டர். ஆவுடையப்பன், தூத்துக்குடி சுங்க இலாக்கா கண்காணிப்பாளர் சாம் அமர்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆண்டறிக்கையை பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் சாமுவேல் வேதமுத்து வாசித்தார். விழா மலரை டாக்டர்.சுப்பையா வெளியிட டாக்டர். ஆவுடையப்பன் பெற்றுக் கொண்டார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தூத்துக்குடி சுங்க இலாக்கா கண்காணிப்பாளர் சாம் அமர்சன் மற்றும் தூத்துக்குடி மயக்கவியல் நிபுணர் எபனேசர் ஜோயல்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். ஜான்சன் ஞானதுரை நன்றி கூறினார். இதில் திரளான மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment