கடலை வியாபாரியிடம் ரூ.12 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தொடர்புடைய நெல்லை மாவட்ட இளைஞர்கள் 3 பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த நிலக் கடலை வியாபாரி பழனிச்சாமியிடம், கடந்த 23ஆம் தேதி ரூ.12 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாக்கனூர் அருகே நிகழ்ந்த இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த தே.அசித்தர் என்ற ராஜா(37), இ.இசக்கிமுத்து(29), செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த க.சீனிவாசன்(24), சமாதானபுரத்தைச் சேர்ந்த செ.கணேசன்(27), மருதகுளம் பகுதியைச் சேர்ந்த சா.இமானுவேல்(36), மனகவலம் பிள்ளை நகரைச் சேர்ந்த சீ.விஜயகுமார்(31) ஆகியோர் ஏப்ரல் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட தே.அசித்தர் ராஜா, இ.இசக்கிமுத்து, க.சீனிவாசன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.சரவணன் பரிந்துரை செய்துள்ளார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிகரன் அதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளார்.
Link ரூ.12 லட்சம் வழிப்பறி வழக்கு: நெல்லை இளைஞர்கள் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

No comments:
Post a Comment